Thursday , April 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விக்னேஸ்வரனின் மனு நிராகரிக்கப்பட்டது

விக்னேஸ்வரனின் மனு நிராகரிக்கப்பட்டது

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த வழக்கினை தக்கல் செய்திருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த விசாரணையின் போது மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து இந்த வழக்குத் தொடர்பான விசாரணை கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற போது நீதிவான் வழக்கை இன்று வரை ஒத்திவைத்தார்.

இந் நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டதுடன், வழக்கின் விசாரணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv