Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நீதிமன்றத்தில் இன்று தப்பினார் விக்னேஸ்வரன்

நீதிமன்றத்தில் இன்று தப்பினார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த முன்னாள் வடக்கு முதல்வர் அவர்களைப் பதவி நீக்க நடவடிக்கை எடுத்தார்.

இதற்கமைய, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன் மீண்டும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv