Thursday , March 28 2024
Home / தமிழ் கவிதைகள் / துயர் துடைப்பு மையம்

துயர் துடைப்பு மையம்

துயர் துடைப்பு மையம்
துயர் துடைப்பு மையம்
என்று தினமும் ஒலி
பரப்பாகின்றதே
வானொலியில்……\

இதை எப்போது
எங்கே துடைத்து
எறிகின்றார்கள்
கண் துடைப்பு
வித்தை போல்
ஆனது இத் திட்டம்…..\

ஆண்டுக்கு ஆண்டு
தொடரும் தொடர்
கதையாகப் போனது
இந்த அவல நிலை….\

வானம் பொழிகின்றது
பூமி நிறைந்து வளிகின்றது
வெள்ளத்தால் ஆண்டில்
ஒரு தடவையாவது
பரிதாப நிலையில்
குடிசை வாசிகள்……\

பாது காப்பு என்னும்
பெயரில் கூட்டிக் கொண்டு
அடைப்பு இல்லாப் பாட
சாலையில் போட்டு விட்டு
பெரிதாகக் கொடுக்கான் பேட்டி…..\

என் மக்கள் என் கண்கள்
அவர்களை பாதுகாப்பாக
வைத்துள்ளோம் என்று
இங்கே குளிர் தாங்காமல்
நடுங்கியே போகின்றது
பல உயிர்கள்…….\

இவை மனிதன் அறியாத
ஒரு திடிர் விபத்து என்றால்
யாரையும் குற்றம் கூற இயலாது
ஆனால் அறிந்த ஒரு விடையம்
ஒர் ஆண்டை தவற விட்டாலும்
மறு ஆண்டு நடவடிக்கை எடுக்க
முடியும் முக்கியமான பிரமுகர்கள்
நெஞ்சில் ஈரம் இருந்தால்…..\

இங்கே இவைதான்
நடை முறையில் இல்லாமலே
போனதே எப் பொழுதும்
ஏமாற்றமாகப் போனது ஏழைக்கு…..\

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
வாய்ப் பேச்சிதான் மிச்சம்
அன்றும் இன்றும் முடிவு
இல்லா அவலம் விடிவு
இல்லா வாழ்க்கை
ஏழையின் வாழ்வு….\

ஆர் எஸ் கலா

Check Also

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! …