Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திருகோணமலையில் கடும் மோதல்? முப்படைகளும் களத்தில்!

திருகோணமலையில் கடும் மோதல்? முப்படைகளும் களத்தில்!

திருகோணமலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச படையினரும், நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் படையினரும், ஏராளமான கனரக ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் போர் பயிற்சி நடைபெற்றுள்ளது.

தமிழீழவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தினர் தமது போர் உத்திகளை வெளிநாட்டுப் படையினருக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கடந்த 2010 ஆம்ஆண்ட முதல் நடத்திவரும் “நீர்க்காகம்கூட்டு போர்ப் பயிற்சிகளின்” இறுதி நாள் ஒத்திகைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதால், ஆயிரக் கணக்கான படையினர் திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் குவிக்கப்பட்டனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட முப்படையினரும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின்படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டு போர்ப் பயிற்சிகளின் இறுதி ஒத்திகை இன்று திருகோணமலைகுச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது.

இதற்காகவே ஆயிரக்கணக்கான படையினர் கனரக ஆயுதங்களுடன் குச்சவெளி கடற்கரையில் குவிக்கப்பட்டிருந்தனர். செப்டெம்பர் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் -9 கூட்டுப் போர்க் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடைந்தன.

இன்று குச்சவெளியில் நடந்த இறுதிக்கட்ட போர்ப் பயிற்சிகளில் சிறிலங்கா அரசபடையினர் தரப்பில் 2500 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப் படையினரும், பங்களாதேஷ். சீனா, இந்தோனேசியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துருக்கி, சாம்பியா, ஆகிய நாடுகளின் படையினரும் பங்கேற்றனர்.

சிறப்பு படைகளின் போரிடும் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சிஇடம்பெறும் என்று இம்முறை நீர்க்காகம் போர்ப் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருக்கம்சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல்நிசங்க ரணவான தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே குச்சவெளியில் மேற்கொள்ளப்படவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்மகேஸ் சேனாநாயக்க நேற்று முந்தினம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv