Saturday , April 20 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 31.12.2018

இன்றைய ராசிபலன் 31.12.2018

மேஷம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில்  உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களைச் சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதி காரி வியப்பார்.வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தோற்றப் பொலிவுக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது  அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறை  கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.  முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: சின்ன சின்னவேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும்.உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடை வீர்கள் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை  அறிவிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்  கள்.மனைவிவழியில் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.  உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv