Wednesday , November 20 2019
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 28.05.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 28.05.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பயணங் களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத் தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்க ளிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய் வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத் தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மிதுனம்: பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்:  மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மாலையிலி ருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்துப் போகும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்பை ஒப்படைப்பார். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கன்னி: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.

துலாம்: வருங்காலத் திட்டத்தில்  ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங் கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.  உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்: மதியம் 12.30 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத் தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.

மீனம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. சகோதர வகையில் விவாதங்கள் வரக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மதியம் 12.30 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

Check Also

Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.11.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.11.2019 மேஷம் இன்று செய்யும் செயல்களில் சற்று …

error: Content is protected!