Friday , April 19 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 24.12.2018

இன்றைய ராசிபலன் 24.12.2018

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு  சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடை கள் நீங்கும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

கன்னி: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.

விருச்சிகம்: மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாலைப் பொழுதிலி ருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

தனுசு: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி கள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். அநாவசியச் செலவு களை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv