Friday , March 29 2024
Home / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிபலன் 24.11.2018

இன்றைய ராசிபலன் 24.11.2018

மேஷம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். அடுத்த வர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச் சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் பிற ரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம்கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி: குடும்பத்தில் அமைதி நிலவும். வர வேண்டிய பணம்கைக்கு வரும். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள்சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் அவசர  முடிவுகள்  எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தி யில் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள் வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv