Wednesday , April 17 2024
Home / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிபலன் 23.11.2018

இன்றைய ராசிபலன் 23.11.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாக னத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக் கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.

சிம்மம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.சாதிக்கும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள் புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலை களில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண் டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மகரம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள்.புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv