Wednesday , May 15 2019
Breaking News
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 19.09.2018
இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 19.09.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக் கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். உத்யோ கத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நிதானம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: நினைத்தது நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் ஆதரவுக் கிடைக்கும். சிறப்பான நாள்.

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருக்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்

சிம்மம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்க ளின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.

கன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அரசால்ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக்கொடுப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனநிறைவான நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக் காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோ கத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

மகரம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங் கள். திடீர் பயணங்கள்இருக்கும். குடும்பத்தில்சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். விட்டுக்கொடுத்து போக வேண்டிய நாள்.

கும்பம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்க ளாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 15.05.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான …

error: Content is protected!