Sunday , December 16 2018
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 17.07.2018
இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 17.07.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்-. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம்  வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள்  அதிகரிக்கும். பூ வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்:  குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த-பந்தங்கள்  மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்-. உத்யோகத்தில் புதிய முயற்சிகள்  பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.

கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி  வருவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.  உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பதறாமல்  பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது  கலங்குவீர்கள்-யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக  ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்  உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  இனிமையான நாள்.

விருச்சிகம்: தவறு செய்ப வர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது  ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.  மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.  மனசாட்சி படி செயல்படும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்ப டாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்  போவது நல்லது. மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.  உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கும்பம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது  சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீ ர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின்  உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 16.12.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!6Sharesமேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை …

error: Content is protected!