Sunday , December 16 2018
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 16.09.2018
இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 16.09.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன் படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள்.வியா பாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப் புகள் தாமதமாகி முடியும் நாள்.

ரிஷபம்: பிள்ளைகள் உங் கள் பேச்சிற்கு மதிப் பளிப்பார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப்பிரச்னையில் நல்லதீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக் கும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கை மாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக் கடிகள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.

கும்பம்: தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிர பலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியா பாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.  அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 16.12.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Sharesமேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை …

error: Content is protected!