Wednesday , December 19 2018
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 12.09.2018
இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 12.09.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்துஉயரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.உறவினர்கள் வீடு தேடி வரு வார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபம் தெரிய வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.   புது வேலைஅமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப்பிரச்னையில் நல்ல தீர்வுகிடைக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி: மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் தடைகளை சந்திக்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.

தனுசு: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள்.வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: சோர்வு  நீங்கி  உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள்கேட்டதை வாங்கித் தருவீர் கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள்.வியாபாரத்தில் சில தந்திரங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கும்பம்: மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறு மையை  இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்க ளின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. வேலைச் சுமை மிகுந்த நாள்.

மீனம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள்ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.என்றாலும் மாலை 6 மணி முதல் சந்திரா ஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

Check Also

அம்பலமானது ஆதாரம்! பெரும் சிக்கலில் மஹிந்த

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக …

error: Content is protected!