Sunday , August 25 2019
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 09.08.2019
இன்றைய ராசிபலன் 24.08.2019

இன்றைய ராசிபலன் 09.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய ராசிபலன் 09.08.2019

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப் பட்டு கத்தாதீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர் கள் பயனடைவார்கள். எதிர் பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்: உங்களைச் சுற்றியி ருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத் தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச் சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங் களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர் கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

தனுசு: எதிர்காலம் பற்றிய பயம், வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணை யான பேச்சால் சரி செய்யுங் கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.

மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத் தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்து காட்டும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Check Also

ஆடி மாத ராசிபலன்

ஆடி மாத ராசிபலன் – மிதுனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! 18.08.2019 முதல் 17.09.2019 மிதுனம்: தைரிய ஸ்தானத்தின் வலிமையுடனும் ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் …

error: Content is protected!