Thursday , September 19 2019
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 08.06.2019
Today rasi palan 14.09.2019

இன்றைய ராசிபலன் 08.06.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப் பிற்கு பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்: இன்றும் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நெருங்கிய வரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்துப்போகும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

துலாம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு: இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவ ரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

Check Also

Today rasi palan 14.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 12.09.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! Today rasi palan | இன்றைய ராசிபலன் 12.09.2019 மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் …

error: Content is protected!