Friday , March 29 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 08.01.2019

இன்றைய ராசிபலன் 08.01.2019

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசே ஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்  கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசியச்செலவுகள் அதிகரிக் கும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துநீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். கல்யாணப் பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். மனைவி வழியில் நல்லசெய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வெல்லும் நாள்.

சிம்மம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதா ரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: குடும்பத் தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அர சால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

தனுசு: குடும்பத்தில் அமைதிநிலவும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப் பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன்இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூடபலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்படவேண்டிய நாள்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபா ரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலான வற்றை செய்து கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்க ளின் திறமையை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv