Tuesday , January 7 2020
Home / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிபலன் 07.08.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 07.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய ராசிபலன் 07.08.2019

மேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப் பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தி யமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: சவால்கள், விவா தங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச மழைப் பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபங் கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட் களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத் தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பண வரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத் தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.

Check Also

Rasi palan today | இன்றைய ராசிபலன் 25.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 25.12.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! Rasi palan today | இன்றைய ராசிபலன் 25.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் …

error: Content is protected!