Thursday , December 13 2018
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 02.12.2018
இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 02.12.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்தஅதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்றவேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்பழகுங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணி களை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சிறப்பான நாள்.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து  மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் சில அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்திருந்த தொகை கைக்கு வரும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமை வெளிப்படும் நாள்.

 

  • 6
    Shares

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 13.12.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareமேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளை யும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு …

error: Content is protected!