Wednesday , August 21 2019
Home / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிபலன் 01.08.2019
இன்றைய ராசிபலன் 21.08.2019

இன்றைய ராசிபலன் 01.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய ராசிபலன் 01.08.2019

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். மற்றவர்களுக்காக பரிந்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிகவேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர் கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

துலாம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர் கள். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப்பார்க்க வேண்டியிருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித்தவிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

மகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப் படும் நாள்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வாகன வசதிப்பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச்செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத் தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத் தில் பழைய சிக்கல்கள் தீரும்.

Check Also

ஆடி மாத ராசிபலன்

ஆடி மாத ராசிபலன் – மிதுனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! 18.08.2019 முதல் 17.09.2019 மிதுனம்: தைரிய ஸ்தானத்தின் வலிமையுடனும் ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் …

error: Content is protected!