Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மீண்டும் இன்று கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்

மீண்டும் இன்று கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் (அமல்) மகிந்த அணிக்கு தாவி­யுள்ள நிலை­யில், அத­னால் எழுந்­துள்ள நெருக்­கடி நிலமை மற்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் கூட்­ட­மைப்பு எத்­த­கையை நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டும் என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழுக் கூட்­டம் இன்று காலை மீண்­டும் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தக் கூட்ட முடி­வில் சிறப்பு ஊடக அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழுக் கூட்­டம் நேற்று மாலை சுமார் இரண்­டரை மணி நேரம் இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் பங்­கேற்­காத செல்­வம் அடைக்­க­ல­நா­தன், கோடீஸ்­வ­ரன் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் கட்சி தாவி­யமை தொடர்­பில் பல்­வேறு கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், நாட்­டில் எழுந்­துள்ள அர­சி­யல் நெருக்­கடி தொடர்­பில் நீண்ட நேரம் ஆரா­யப்­பட்­டுள்­ளது. மகிந்­த­வையா அல்­லது ரணி­லையா ஆத­ரிப்­பது. இல்­லா­வி­டின் நடு­நி­லமை வகிப்­பதா என்­பது தொடர்­பி­லும் பேசப்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு இறுதி முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இத­னால் இன்று காலை மீண்­டும் கூடிப் பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­டத்­தின் முடி­வில் சிறப்பு ஊடக அறிக்­கை­யும் வெளி­யி­டத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …