Wednesday , June 26 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்!!

சஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் என்ற சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதிகளவான ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினரின் சீருடைக்கு ஒப்பான சீருடைகளும் அதிகளவில் மீட்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று காத்தான்குடி குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சஹரான் ஹாஷிமின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் என்ற சந்தேக நபர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மில்ஹான் என்ற குறித்த நபர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு உம்ராவுக்காக சென்றுள்ளதாகவும், அவர் மீள இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

எனினும், அவரது பயணப்பொதி மாத்திரம் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேக நபர், யுத்த காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை ஆயுதப்படைகளில் இருந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், வவுணதீவு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலையினையும் அவரே நெறிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் தலைமறைவாகியுள்ள குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்குரிய விசேட நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 25.06.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் …

error: Content is protected!