Wednesday , January 16 2019
Home / தமிழ் கவிதைகள் / நிழலில் தேடிய நிஜம்…!

நிழலில் தேடிய நிஜம்…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

சுட்டெரிக்கும் சூரியன்
வானில் பவனி வந்து
நிழலில் நிஜம் தேடி
சுழலும் பூமியில்
சூரியக்கதிர்களால்
முத்தமிடுகின்றன!

விண்ணில் மிதக்கும்
வட்ட முழு நிலா
மண்ணில் பரவும்
ஒளி வெள்ளத்தில்
நிஜத்தை நிழலில்
தேடி அலைகிறது!

ஆகாயத்தில்
அள்ள அள்ள
குறையாத சுடர் விடும்
நட்சத்திர பூக்கள்
நிலத்தின் மேல்
ஒளிப்பூக்களை வீசி
நிழலில்
நிஜத்தை தேடுகின்றன!

அரசியல்வாதிகள்
மனசாட்சி நீதி நேர்மை
முத்துக்களை
ஊழல் கடலில் மூழ்கி
தேடித் பார்க்கின்றனர்!

  • 2
    Shares

Check Also

இறைவன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!வாசம் வீசா எந்தன் வரியினில் மூழ்கிய வடா மலர்களைக் கொண்டு நாள்தோறும் நான் ஒரு பாமாலையை பூமாலை …

error: Content is protected!