Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?

ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?

இலங்கை ஜனநாயக சட்டவாக்க ஆட்சியில் இருந்து இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

தற்போது வரை பெரும்பான்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே உண்டு. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க மகிந்த ராஜபக்ச அவர்களினால் முடியாத நிலையில் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது சகோதரர் கோதபாய ராஜபக்சே ஊடாக முப்படைகளை கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கூடும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செயலாளர்கள் மாற்றம், பொலீஸ் மா அதிபர் மாற்றம், தகவல் திணைக்கள பணிப்பாளர் மாற்றம் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் முற்றுகை அலரி மாளிகையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே வெளியேறவேண்டு என்ற உத்தரவுகள் இலங்கையில் அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இன் நிலையில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பாராளுமன்றத்தை கலைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே அடுத்த தேர்தல் வரை மைத்திரி மகிந்த கட்டுப்பாட்டில் தான் அரசாங்கம் இயங்க வாய்ப்புள்ளது.

ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பலவந்தமாக பிடித்திருக்கும் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இடத்தை விட்டு அவர்களை வெளியேற்ற ஆலோசனை வழங்குமாறு பாதுகாப்பிற்கு பொறுப்பான உயர் பிரதானி ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எப்படியிருப்பினும், நாட்டினுள் எவ்வித குழப்பநிலைமையையும் ஏற்பட கூடாதெனவும் மிகவும் சமாதானமான முறையில் இந்த சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் அலரி மாளிகையை விட்டு சென்ற முறையை ரணில் விக்ரமசிங்கவும் கடைபிடிப்பார் எனவும் பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள போதிலும் தானே தற்போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv