Sunday , August 25 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்

க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகளும், பழைய பாடத்திட்டசிபாரிசின் கீழ் 139 475 பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

அதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 என்பதாகும்.

அத்துடன், 2678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் , சிங்கள மொழியில் 255,529 பரிட்சாத்திகளும், தமிழ் மொழியில் 83,840 பரிட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,995 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Check Also

இன்றைய ராசிபலன் 24.08.2019

இன்றைய ராசிபலன் 24.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய ராசிபலன் 24.08.2019 மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு …

error: Content is protected!