Thursday , April 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!

கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பிலோ அல்­லது சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி சார்­பிலோ அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இரு கட்­சி­க­ளும் இது தொடர்­பில் பேச்சு நடத்­து­கின்­ற­னர்.

அந்­தப் பேச்சு சுமு­க­மா­கப் போகின்­றது. இறு­தி­யில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­கப்­ப­டும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தடா­ல­டி­யாக நேற்­றுத் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்.

அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய கள­மி­றங்­கு­வார் என்று அதற்கு மகிந்த ராஜ­பக்ச இணங்­கி­யி­ருப்­ப­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் அறி­விப்பு கொழும்பு அர­சி­ய­லில் புதிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தனித்­து­வத்தை இழந்­து­விட்டு பொது எதி­ர­ணி­யான சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன் கூட்­டணி அமைப்­ப­தற்­குத் தாம் தயா­ரில்லை என­வும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அரச தலை­வர் வேட்­பா­ளர் என­வும் அந்­தக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­ல­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர கண்­டி­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற கூட்­ட­மொன்­றில் அறி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யி­லேயே, நேற்று பன்­னாட்டு ஊட­கம் ஒன்­றின் கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கும்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எந்­தத் தேர்­தலை முத­லில் நடத்­து­வது என்­ப­தில் இழு­பறி தொடர்­கின்­றது. முத­லில் அது தொடர்­பில் முடி­வெ­டுக்­கப்­ப­டும். அதன் பின்­னர் அரச தலை­வர் வேட்­பா­ளர் யார் என்ற முடிவு எடுக்­கப்­பட்டு அறி­விக்­கப்­ப­டும்.

எந்­தத் தேர்­த­லை­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி – சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி இணைந்து சந்­திக்க வேண்­டும் என்­பதே இரு கட்­சி­க­ளி­லும் உள்ள பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் கோரிக்­கை­யாக உள்­ளது. இந்த விட­யம் தொடர்­பில் நாம் விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி வரு­கின்­றோம். அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுக்­க­மாட்­டோம் – என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv