Thursday , March 28 2024
Home / தமிழ் கவிதைகள் / வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே

நீந்தவும் துணிவு இல்லை.
நீச்சலும் தெரியவில்லை.
வறுமையின் பிடியில்.
இருந்து மீண்டிடவே
வலை வீசப் போனவரே….!

ஒட்டிய வயிறுடனே
உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு
படகோட்டி வலை
வீசப் போனவரே …!

நடுக் கடலிலே
துணைக் கரம் இன்றி
துட்டுக்காக தத்தளித்த படி
கூடையை நிறப்ப
வலை வீசப் போனவரே …!

குப்பத்துச் சேவல் கூவிடிச்சு
பக்கத்து ராமன் வீடு வந்தாச்சு
அள்ளி எடுத்த வலையோடு
போன மச்சானே இன்னும்
வீடு வரக் காணலயே …!

வங்கங் கடலை
நோக்குகின்றேன்
எங்கும் விழியை
விட்டுத் தேடுகிறேன்
வீச்சு வலை எங்கே
வீட்டு மாப்பிள்ளை எங்கே ..?

ஓங்கி அடிக்கும் அலையே
இந்த அவலப் பெண்ணின்
நிலையைக் கேளாயோ ?
வலை வீசப் போனவரை
சுழல் காற்று வீழ்த்திடவே
நீ மறைத்து விட்டாயோ ..?
ஆழித் தாயே பதில் கூறாயோ ..?

ஆர் எஸ் கலா

Check Also

துயர் துடைப்பு மையம்

துயர் துடைப்பு மையம் துயர் துடைப்பு மையம் என்று தினமும் ஒலி பரப்பாகின்றதே வானொலியில்……\ இதை எப்போது எங்கே துடைத்து …