Friday , March 22 2024
Home / Tag Archives: OPS

Tag Archives: OPS

தர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ்: குருமூர்த்தி

முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தன்னை அவர் சந்தித்ததாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தன்னை சந்திக்க வேண்டும் என்று ஒரு நண்பர் மூலம் தூது …

Read More »

சொத்துக்குவிப்பு வழக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதி டி குன்கா, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துகளில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தவிட்டிருந்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமராசாமி …

Read More »

ரஜினியையும் கமல்ஹாசனையும் வண்ண பலூன்களுடன் ஓப்பிட்ட ஓபிஎஸ்

தி.மு.க, பா.ஜ.க.

அரசியில் வானில் அரிதாரம் பூசிய புதிய வண்ண பலூன்கள் விரைவிலேயே வெடித்து சிதறும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை 11.10 மணியளவில் திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது. …

Read More »

அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் சிலை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழும் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை 11.10 மணியளவில் திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ …

Read More »

மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும்

பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று …

Read More »

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார். இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. …

Read More »

நான் சசிகலாவை சமாளித்தேன்

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது: நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் …

Read More »

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து …

Read More »

கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்!

முதல்வருக்கு பாராட்டுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் அரசியல் களத்தில் புதிய கட்சியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் விஷால் மற்றும் விஜய் எந்த நேரமும் களமிறங்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் உள்பட இன்னும் ஒருசிலரும் அரசியலில் நுழைய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் …

Read More »

சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி?

மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் …

Read More »