Friday , March 29 2024
Home / Tag Archives: ரணில் விக்ரமசிங்க

Tag Archives: ரணில் விக்ரமசிங்க

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் இரு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போது ஐக்கிய …

Read More »

பிரதமராக ரணில்! உச்சகட்டத்தில் பரபரப்பில் கொழும்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க …

Read More »

கதைப்பது கவனம் ரணில் முக்கிய உத்தரவு…

நீதிமன்ற விசாரணைகள் குறித்த போதிய அறிவின்றி அவை தொடர்பாக கருத்து வெளியிடுவதை தவிர்க்குமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து …

Read More »

மக்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர்ந்து போராட வேண்டும்: ரணில்

Ranil

ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) விசேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரணில், தொடர்ந்து போராடினால் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு ஆட்சி செல்வதைத் தடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் ஜனநாயகம் பணயக் கைதியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. இந்த இருள் சூழ்ந்த …

Read More »

மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி

மகிந்தவிற்கு

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு …

Read More »

பிரதமருக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம் ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரேரணையில் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

Read More »

ஒரு சிலரின் செயல்களால் முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது

ஒரு சிலரின் அழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ நடைபெற்ற சம்பவங்கள் ஊடாக உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கு …

Read More »

கடன் பொறியில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது

கடந்த இரண்டு வருடங்களில் கடன் பொறியில் இருந்து நாட்டை காப்பாற்றியதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிரந்தரமான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடனை திரும்ப செலுத்துவதற்கு தேவையான வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுக்கடனை வழங்குவதற்காக அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார். கொழும்பு …

Read More »

அதிகார பகிர்வு தொடர்பாக மக்களே தீர்மானிக்க வேண்டும்: பிரதமர்

அதிகாரப் பகிர்வு தொடர்பான இறைமையதிகாரம் மக்களையே சாருமென குறிப்பிட்டுள்ள பிரதமரும் அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படாதென மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதே சந்தர்ப்பத்தில் ஏனைய …

Read More »

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம் வடக்கு மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்- ”வட. மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி …

Read More »