Friday , March 29 2024
Home / Tag Archives: போர்க்குற்றங்கள்

Tag Archives: போர்க்குற்றங்கள்

போர்க்குற்றங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணை

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக (தனியார்) விசாரணையை நடத்தவுள்ளது. இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் அடங்கிய விபரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துயருற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் சரியான முன்னேற்றம் காண ஐ.நா …

Read More »

போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, விசாரணை எதற்கு? – ராஜித கேள்வி

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். “போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றன என்று நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது. போர்க்குற்ற விசாரணைகள் என்கின்ற போது, புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார்- அவர்களில் யாரை விசாரிப்பது- அவர்களின் …

Read More »