Thursday , March 28 2024
Home / Tag Archives: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Tag Archives: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.

Read More »

தீர்வு கிடைக்குமென நம்பியே வாக்களித்தோம்; ஜனாதிபதிக்கு : மாவை எம்.பி சீற்றம்

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “ஒரு சம்பவம் நீதிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் …

Read More »

ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக ரவிராஜின் பாரியாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று …

Read More »

கூட்டமைப்பை கூறுபோட்டு அரசியல் தீர்வை மழுங்கடிக்க சதி: சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், கூட்டமைப்பை கூறுபோட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டால் அது தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனக் சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன், தமிழ் தரப்பு மீது …

Read More »

தமிழர்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசு

பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் தினத்தில் அரச நிகழ்வு ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளமை தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க முடியும் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் வெசாக் கூடுகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றமை சிங்கள மயமாக்கலின் ஒரு அங்கம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். வெசாக் …

Read More »

தமிழர்களை மீண்டும் ஆயுதமேந்த வைக்க முயற்சிக்கிறதா இந்த அரசு? – சிறிதரன்

மக்களுடைய கண்ணீருக்கும், வலிகளுக்கும் விடை கூற தவறிவரும் இந்த அரசாங்கம், தமிழர்களை மீண்டுமொரு யுத்தம் நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கிறதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தொழிலாளர்களாக இருந்து அந்தந்த குடும்பங்களை வழிநடத்தி பாதுகாக்க …

Read More »

கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணமில்லை: அனந்தி சசிதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த …

Read More »

ஜெனீவா வங்கியில் புலிகளுக்கு கணக்கு, சுவிஸ் புலிகள் தலைவர் தொடர்பு

சர்வதேச புலிகள் வலையமைப்பின் பெருந்தொகையான நிதி ஜெனீவா நகரிலுள்ள பிரபல வங்கியொன்றில் வைப்பில் உள்ளதாகவும், சுவிட்சர்லாந்திலுள்ள புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவுள்ள அப்துல்லா என்பவர் இந்த வங்கிக் கணக்குகளுக்கு பொறுப்பானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. காரியாலயத்துக்கு முன்னால், இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜெனீவாவிலுள்ள குறித்த வங்கியின் கணக்கிலிருந்து நிதி பெறப்பட்டுள்ள போதே இந்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …

Read More »

தமிழர்களின் வேதனைகளுக்கு விரைவில் ஒரு முடிவு வேண்டும்

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை …

Read More »

விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்

விக்னேஸ்வரன்- ரவூப் ஹக்கீம்

விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கான பேச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமது கட்சி ஈடுபட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட,கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். …

Read More »