Saturday , April 20 2024
Home / Tag Archives: டொனால்டு டிரம்ப்

Tag Archives: டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெளியிட்ட முக்கிய கோஷம், “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்பதாகும். இதற்கான நடவடிக்கையிலும் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விவகாரத்திலும் முன்னுரிமை கொடுத்துதான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் டொனால்டு …

Read More »

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்

“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் விதியின் பார்வையை இழந்து, அவர்கள் அமெரிக்க பெருந்தன்மையின் மீது தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் விளைவாக, நமது குடிமக்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் அரசாங்கத்தில் நம்பிக்கையை …

Read More »

அமெரிக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு டொனால்டு டிரம்ப் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதி, அந்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். தற்போது மீண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற விரும்பும் 38 நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய பயண அனுமதி பெற வேண்டும். தங்கள் நாடுகளை கடந்து அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகளை அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அளித்த தகவல்கள் அடிப்படையில் …

Read More »

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் …

Read More »

வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்

ரோம் நகர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, …

Read More »

அமெரிக்க மக்களிடம் ரஷிய எதிர்ப்பு உணர்வை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்: புதின் குற்றச்சாட்டு

சமீப காலமாக அமெரிக்க மக்களிடம் ரஷியாவுக்கு எதிரான மனபோக்கை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள் என அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பல்வேறு ரகசியங்களை ரஷிய மந்திரியிடம் கூறியதாகவும், குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அமெரிக்க …

Read More »

மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக …

Read More »

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன்: அதிபர் டிரம்ப்

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத சோதனைகளும் நடத்தி வருகிறது. அமெரிக்க பகுதியை குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் நடத்தியது. இருந்தும் எந்நேரமும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடும் …

Read More »

534 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த ‘நாசா’ வீராங்கனை: டிரம்ப் வாழ்த்து

534 நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி சுட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். …

Read More »

டொனால்டு டிரம்ப் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி அமெரிக்காவில் 150 இடங்களில் பேரணி

அமெரிக்காவில் ஜனாதிபதி வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர். அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதைப் பின்பற்றி, தனது வருமான வரி கணக்கை வெளியிட முடியாது என ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் கூறி விட்டார். இது அங்கு பெரும் …

Read More »