Friday , March 29 2024
Home / Tag Archives: சி.வி.விக்னேஸ்வரன்

Tag Archives: சி.வி.விக்னேஸ்வரன்

நாளை உருவாகும் புதிய கூட்டணி

நாளை உருவாகும் புதிய கூட்டணி

நாளை உருவாகும் புதிய கூட்டணி முன்னாள் வடமாகாண உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது. ரில்கோ ஹோட்டலில் நாளை காலை 10 தான் குறித்த உடன்படிகை கைச்சாதிடப்பட்ட பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள். இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கைச்சாத்திடவுள்ளன. …

Read More »

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழரின் நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, …

Read More »

தமிழ்மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும்

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வௌியேயுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தவிர்ந்த மற்றைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தம்முடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஏதேனுமொரு கட்சிக்கு சார்பாக அந்த சின்னத்தில் போட்டியிட்டால் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படலாம் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மீண்டும் …

Read More »

பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்

பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து …

Read More »

அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் : ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி, ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார். இதனால், அவர்களின் இரு குழந்தைகளும் தாயையும் …

Read More »

மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை

வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார். Pயரட …

Read More »

வடக்கின் கலாசாரத்தை அழிப்பதற்கு சிங்கள, பெளத்த இனவாதம் துடிக்கிறது! – வடக்கின் கல்வி அமைச்சர் எச்சரிக்கை

“கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள, பெளத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி: சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே சாத்தியம் என்கிறார் விக்கி!

“கடந்த அரசின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையிலான சட்டம் விடுபாட்டு நிலையில்  காணப்படுகையில் இவை தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்கும், நீதியின்’முன் நிறுத்துவதற்கும் சர்வதேசத்தின் அழுத்தம் முக்கியமானது”  என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் கொலைகுறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தால் நன்று என்ற கருத்தையும் முதலைமைச்சர் வெளிப்படுத்தினார். …

Read More »

மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு அமைக்கப்படவேண்டும்! – விக்கி யோசனை

20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசமைப்பு திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாண …

Read More »

வடக்கு அமைச்சரவையிலிருந்து டெனீஸை தூக்கி எறிந்தார் முதல்வர் விக்கி!

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குரே சட்டமா அதிபர் …

Read More »