Friday , April 19 2024
Home / Tag Archives: சி.சிறிதரன்

Tag Archives: சி.சிறிதரன்

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உடன் விசாரணை அவசியம்! – கூட்டமைப்பு வலியுறுத்து 

கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணை

போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உரிய விசாரணை உடன் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது இடம்பெற்ற போர்க்ககுற்றங்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடத்தப்படும் என்று …

Read More »

இனியும் சிறந்ததோர் அமைச்சரவையை முதல்வர் விக்கியால் அமைக்க முடியுமா? – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கேள்வி

சிறந்ததோர் அமைச்சர் வாரியத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும், ‘இலங்கைத் தமிழர்’ நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2013ஆம் ஆண்டு வடக்கு …

Read More »

இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது! – நாடாளுமன்றில் மீண்டும் தெரிவித்தது கூட்டமைப்பு

வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது எனவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு …

Read More »