Tuesday , April 16 2024
Home / Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி

Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்று 01.03.2020 நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளளார். இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் …

Read More »

நேற்றைய தினம் சஜித், ரணில் ரகசிய சந்திப்பு

நேற்றைய தினம் சஜித், ரணில் ரகசிய சந்திப்பு

நேற்றைய தினம் சஜித், ரணில் ரகசிய சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று மாலை கூடிய போதும் தேர்தல் சின்னம் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் வரும் ஞாயிறு செயற்குழு கூடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் தெரிவித்துள்ளார். கூட்டம் நடக்க முன்னர் ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். அதன் பின்னரே இந்த சந்திப்பு நடந்தது. மேலும் செய்திகள் …

Read More »

முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி

முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 04 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு இன்று கூடவுள்ளது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. கூட்டணியின் பொதுச்செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இன்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்க …

Read More »

தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி

தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி

தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்க 30 அம்சக் கோரிக்கையை முன்வைத்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம்பியுமான ஆறுமுகம் தொண்டமான். ஆனால் அந்த கோரிக்கைகளை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி தொண்டமானை உள்வாங்க மறுத்துவிட்டது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதற்கு அப்பால் இ தொ காவை இணைப்பதன் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எதிர்ப்பை சம்பாதிக்கக் …

Read More »

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு - அகில விராஜ் காரியவசம்

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். அந்தவகையில், 1. ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.கட்சியின் சம்மேளனம், ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், காலை 10 மணிக்கு நடைபெறும். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச …

Read More »

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

ஐ.தே.க

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்தவாரம் வேட்பாளர் நியமனம் இடம்பெறும் என்றும் அதனை கட்சியின் மூத்த உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார். ஐ.தே.கவின் வேட்பாளராக …

Read More »

மனோ ஜனாதிபதி ​வேட்பாளரை தீர்மானித்து விட்டாராம்

மனோ கணேசன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை. ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும் தற்போது அவர்களுக்குள் …

Read More »

படுகொலைகளைப் புரிந்த கோட்டாவை உலாவவிட்டது ஐ.தே.க. வின் தவறு!

மனிதப் படுகொலைகளைப் புரிந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்த பாரிய தவறென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி வென்றால் இந்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் பயங்கரவாதிகளைக் கூண்டோடு …

Read More »

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறு

மைத்திரி மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினரின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்துள்ளார். இதன் விளைவாகவே …

Read More »

பொன்சேகா உட்பட ஒருவருக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் அண்மைக்காலமாக உச்சக்கட்ட கருத்து …

Read More »