Sunday , November 18 2018
Home / Tag Archives: ரணில்

Tag Archives: ரணில்

ஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்! ரணில்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் …

Read More »

மைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்

பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் …

Read More »

கன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்

பாராளுமன்ற அமர்வில் இன்று ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்து கன்னத்தில் கை வைதுகொண்டு சிரித்தவாறு சம்பவங்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்துள்ளார். அத்துடன் அவ்வப்போது ரவி, சஜித்,சாகல எம்.பிக்கள் அவரிடம் காதில் ஏதேதோ கூறிக்கொண்டு அங்கும் இங்குமாய் ஓடித் திருந்தனர். இந்நிலையில் சபாபீடதுக்கு முன்பாக கைகலப்பு தொடங்கியவுடன் எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு …

Read More »

ரணில் திடீர் பதவி விலகல் ?

நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜனாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. அம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் …

Read More »

மக்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர்ந்து போராட வேண்டும்: ரணில்

ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) விசேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரணில், தொடர்ந்து போராடினால் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு ஆட்சி செல்வதைத் தடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் ஜனநாயகம் பணயக் கைதியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. இந்த இருள் சூழ்ந்த …

Read More »

சிறிசேன சற்றுமுன் ரணில் தரப்புக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைச் சீண்டவேண்டாமென்றும் அதனால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்றும் ரணில் தரப்பை கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் ரணில். நான் அதற்கு கடைசி வரை …

Read More »

மனம் வருந்தும் ரணில்

என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல. ஜனாதிபதி தனது சட்டவிரோதமான நடவடிக்கையினால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுடன் தன்னால் பணியாற்ற முடியாதிருந்ததாகவும் அவரின் பொருளாதாரக் கொள்கைகள் நிலைமைக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற கூட்டத்தில தெரிவித்திருந்தமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் …

Read More »

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னைப் போன்­ற­வர். அவர் பிர­பா­க­ர­னுக்­குச் சம­மா­ன­வர். உள்­நாட்டு தரப்­புக்­கள் மற்­றும் ஊட­கங்­களை விட­வும் பிர­பா­க­ர­ னுக்கு ஆத­ர­வ­ளித்­தது போல் பன்­னாட்டு சமூ­கம், பன்­னாட்டு ஊட­கங்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வெளி­யி­டு­கின்­றன. இவ்­வாறு கூறி­யுள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு. கொழும்­பில் பொது­ப­ல­சேனா நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்­பின் பொதுச் செய­லர் மாகல்­கந்தே சுதந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, …

Read More »

ரணில் மீண்டும் பிரதமரானால்… ஜனாதிபதி சூளுரை

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை …

Read More »

மைத்திரி மீது ரணில் கடுமையான சீற்றம்

நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே …

Read More »
error: Content is protected!