Thursday , March 28 2024
Home / Tag Archives: முல்லைத்தீவு (page 2)

Tag Archives: முல்லைத்தீவு

காலக்கெடு முடிஞ்சு போச்சு எமது நிலம் எமக்கு வேண்டும்

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அந்தப் பகுதி மக்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினரின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 15 நாட்கள் …

Read More »

148 மில்லியன் ரூபா கிடைத்தால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு வில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணி விரையில் விடுவிக்கப்பட இருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வு ,மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் ரி.என்.சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்தபின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில் 38 …

Read More »

செஞ்சோலை தளிர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஆண்டுகள் பதினொன்று!

யுத்தத்தால் தமது உறவுகளை பறிகொடுத்து, பாசத்திற்காய் ஏங்கித் தவித்து, எதிர்காலம் பற்றி சிந்திக்கவே தெரியாத பருவத்தில் வாழ்ந்த செஞ்சோலை சிறுமிகளை கொடூரமாக கொன்றொழித்து இன்றுடன் ஆண்டுகள் பதினொன்று ஆகிவிட்டது. இலங்கை படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களில், வரலாற்றில் மிகவும் கறைபடிந்த, அனைவர் மனதையும் உருக்கும் கோரச் சம்பவ பட்டியலில் இதுவும் ஒன்று. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு இதே …

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில், கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 707 மாற்றுத்திறனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 மாற்றுத்திறனாளிகளும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 443 மாற்றுத்திறனாளிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 316 …

Read More »

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை …

Read More »

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தர்க்கம்: சி.வி. வெளிநடப்பு!

காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் …

Read More »

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

இறுதி யுத்த அழிவுகளை பறைசாற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் துக்க தினத்தன்று, விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி அதனை கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாமென கோரப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவியான எஸ்.புஸ்பாம்பாள் கூறுகையில், பல இழப்புகளை சந்தித்த அந்த நாளில் மக்களின் உணர்வுகளுக்கு …

Read More »

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது – த.தே.கூ

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியம் அற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ய முடியும் என கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்

Read More »

எமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வையுங்கள்

காணமல்போனோர் விடயத்தை உதாசீனம் செய்யாது, தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் …

Read More »

சாட்சியை கோரும் இராணுவம்; உறவுகள் கவலை

இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் போராட்டம் இன்றுடன் இருபத்தோராவது நாளை எட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட …

Read More »