ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறும் தாம் சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் மகிந்தவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் …
Read More »மகிந்தவுக்கு மீண்டும் துரோகம் செய்த மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட 5 வர்த்தமானி அறிவித்தல்களில் 4 …
Read More »மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »