Monday , January 21 2019
Home / Tag Archives: தினகரன்

Tag Archives: தினகரன்

தினகரன் தவிர அனைவரையும் ஏற்று கொள்ள தயார்

அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுக இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைய தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் முதலமைச்சர் …

Read More »

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி – நமது அம்மா செய்தி

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் …

Read More »

திவாகரனை அதிமுக வில் சேர்க்க மாட்டோம் – ஜெயக்குமார் தடாலடி

தினகரன் – திவாகரன் இடையே ஏற்பட்ட மோதலில், நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திவாகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் – திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. …

Read More »

கங்கை அமரனிடம் அடித்து பிடுங்கிய பங்களாவை ஒப்படை: தினகரனுக்கு எச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு பூஜையில் கலந்துக்கொண்டார் பாஜக தலைவர் எச்.ராஜா. இவர் எப்போதும் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசக்கூடியவர். தற்போதும் அதே மாதிரிதான் பேசியுள்ளார். எச்.ராஜா கூறியது பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்கீம் …

Read More »

பாஜகவிற்கு அடிபணிந்தாரா தினகரன்?

அமமுக கட்சியின் தலைவர் தினகரன், பாஜகவிற்கு அடிபணிந்துவிட்டார் என்று வெளியான செய்திக்கு, தினகரன் பதில் அளித்துள்ளார். கடந்த 12 ந் தேதி தமிழக வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தினர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், என்னதான் இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர் என்றும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால்ன் …

Read More »

நாளை சிறைக்கு செல்லும் சசிகலா?

தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். அந்நிலையில், நடராஜனின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சசிகலா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் …

Read More »

எல்லாம் ஏமாற்று வேலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் போராடுவது ஏமாற்று வேலை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடந்த சில நாட்களாகவே பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவுரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “அதிமுக எம்.பி.க்கள் செய்வது ஏமாற்று வேலை. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு …

Read More »

தினகரனின் குக்கரை தள்ளி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. தற்போது உயர் நிதிமன்ரமும் தேதி குறிப்பிடாமல் குக்கர் வழக்கை தள்ளிவைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை கேட்டு தேர்தல் கமிஷனை அனுகினார் தினகரன். ஆனால், குக்கர் சின்னம்தான் அவருக்கு கிடைத்தது. அதிமுகவின் மற்றொரு அணியாகவே செயல்படும் தினகரன், மக்கள் மத்தியில் பிரபலமான குக்கர் சின்னத்தை உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும் …

Read More »

நான் சசிகலாவை சமாளித்தேன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது: நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் …

Read More »

சண்டாளப் பாவி

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகத்தின் தலைவருமான பா வளர்மதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது. கோவிலுக்கு சென்று வழிபடுவது, மண் சோறு சப்பிட்டது, தீச்சட்டி ஏந்தியதுமாக இருந்த பா வளர்மதிக்கு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாரின் விருதா என அதிகமாக அவர் விமர்சிக்கப்பட்டார். வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று …

Read More »
error: Content is protected!