Wednesday , February 21 2018
Home / Tag Archives: தமிழகம்

Tag Archives: தமிழகம்

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார். இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. …

Read More »

ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர். இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் …

Read More »

சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கொளத்தூரில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் …

Read More »

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி …

Read More »

விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய …

Read More »

தமிழகத்தில் தடையின்றி 66% பேருந்துகள் இயக்கம்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை …

Read More »

2017 தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை!

* ஜனவரி மாத இறுதியில் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. * ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதிமாறன், கலநிதிமாறன் உள்ளிட்ட அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். * சட்டசபை அதிமுக கட்சித்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். * ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக முதன் முதலாக போர்க்கொடி தூக்கினார். * சொத்துக்குவிப்பு …

Read More »

டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடம்

மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு வருடம் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. டெங்கு என்பது ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஏடிஸ் ஏகிப்டி(AEDES AEGYPTI) என்ற ஒரு வகை கொசுவால் பரப்பப்படுகிறது. 2014-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் …

Read More »

நாசகர திட்டங்களை நிறைவேற்றப்படுவதற்கு தமிழகம் என்ன பலியாடா? – மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி

அடுத்தடுத்து நாசகர திட்டங்களை நிறைவேற்றப்படுவதற்கு தமிழகம் என்ன பலியாடா? என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இப்பணிக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் …

Read More »

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலாவின் செயல்பாடுகளால் மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது. மிக மிகத் தாமதமாக கிடைத்துள்ள தீர்ப்பாக இருந்தாலும் தற்போதைய அரசியல் …

Read More »
error: Content is protected!