Saturday , February 24 2018
Home / Tag Archives: ஐ.நா

Tag Archives: ஐ.நா

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ நா நோக்கி!!!

இடம்: ஜநா முன்றல் ஜெனீவா காலம்: 12.03.2018 திங்கட்கிழமை நேரம்: பிற்பகல் 14:00 மணியிலிருந்து மாலை 18:00 மணி வரை.

Read More »

காணா­மல்­போன சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஐ.நாவில் குழப்­பம்

வடக்­கில் போரின் பின்­னர் காணா­மல்­போன சிறு­வர்­க­ளில் 611பேர் இன்­று­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன. ஆனால் ஐ.நாவில் இடம்­பெ­றும் 77ஆவது அமர்­வின் சிறு­வர் உரிமை மாநாட்­டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவ­ரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதி­கா­ரி­கள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜெனி­வா­வில் இடம்­பெ­றும் 77ஆவது ஐ.நா கூட்­டத்­தொ­ட­ரின் சிறு­வர் உரிமை மாநாடு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. எதிர்­வ­ரும் 2ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதில் இலங்கை சார்ந்த விட­யம் …

Read More »

ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெறக்கோரும் ஐ.நா. தீர்மானம் வெற்றி

ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் …

Read More »

தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை உறுதி -அதிபர் சிறிசேனா

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள், ஐ.நா. சபையில் அறிவிக்கப்பட்டு, இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிவிசாரணை தேவையை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுவரை இந்த இனப்படுகொலை குறித்து, இலங்கை ராணுவத்தினருக்கு ஆதரவாக பேசிவந்த அதிபர் சிறிசேனா, முதன்முறையாக போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை ராணுவத்துக்கு எதிராக பகிரங்கமாக …

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யுங்கள் (படங்கள் இணைப்பு)

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம் * படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் * காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும் * தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது * நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒரு சிலர் பிரயத்தனம் “நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை …

Read More »

இந்தியா – பாக். இடையேயான பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா செய்தித் தொடர்பாளர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது குல்புதீன் ஜாதவ் மரண தண்டனை, எல்லை தாண்டிய தாக்குதல், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைத்தல் போன்ற விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. சர்வதேச அரங்கில் மாறி மாறி இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் …

Read More »

பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா. கண்டுகொள்வதில்லை: சி.வி. விசனம்

“மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. …

Read More »

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது – அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் புகழாரம்

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது எனவும், திறமையான வீரர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. இந்த அமைதிப்படையில் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ …

Read More »

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

ஐ.நாவே கால அவகாசத்தைக் கொடுத்து சாட்சியங்கள் அழிந்து போக துணை நிற்காதே எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஐ.நா வே பாதிப்புற்ற மக்கள் நாங்கள், சர்வதேச விசாரணையே …

Read More »

ஸ்ரீலங்கா படையினர் குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை

வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை குறைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்தார். தனது …

Read More »
error: Content is protected!