Thursday , March 28 2024
Home / Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி (page 4)

Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச தான் எந்த …

Read More »

தீர்க்கமான முடிவை நோக்கி ஐ.தே.க!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். …

Read More »

ஆணைக்குழுவுக்கு ரவி தரும் விளக்கங்களின் பின்னரே அவர் பற்றிய முடிவை எடுக்கும் ஐ.தே.க.!

பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதில்களின் அடிப்படையிலேயே அவர் பற்றிய முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்குமென அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்பே இந்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க. …

Read More »

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை ஐ.தே.க. தோற்கடிக்கும்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின் அதனை ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கும் என்று அமைச்சரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஆஸீம் தெரிவித்தார். சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபணம் இல்லாதவையாகும். குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வரை அல்லது நிராகரிக்கப்படும் வரை ஐ.தே.க. அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையுத் தோற்கடிக்க …

Read More »

உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் யானைச் சின்னத்திலேயே களமிறங்கும்! – கூட்டமைப்பு , ஜே.வி.பி. தனிவழிப்பயணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. குறித்த தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறவுள்ளதுடன், அதற்குரிய திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பின்கீழ் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது. சிறுகட்சிகள் பல ஐ.தே.கவுடன் கைகோர்க்கவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், …

Read More »

ஐ.தே.கவின் 71ஆவது ஆண்டு விழாவிலும் மைத்திரி பிரதம அதிதி!

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், …

Read More »

புதிய அரசமைப்புக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் : சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அதற்கு சர்வதேச ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் எடுத்துரைத்தாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐந்துநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலக்கிருஷணன் மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சியின் …

Read More »

நல்லிணக்கத்தினை குழப்பினால் நடவடிக்கை: மலிக் சமரவிக்ரம

இனவாத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், “ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியத்தை வலுவூட்டி மதம் சாராத ஒரு கட்சியாக செயற்பட்டு வருகின்றது. உண்மையான இலங்கையின் அடையாளத்தைக் கட்டியெழுப்ப கட்சி அர்ப்பணிப்புடன் …

Read More »

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும். எந்த தேர்தலுக்கு …

Read More »

திருமலை எண்ணெய் கிணறுகள்;பேச்சுவார்த்தையின் பின்னரே முடிவு எடுக்கப்படும்

திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கும், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகள் விற்பனை விவகாரத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. …

Read More »