Friday , January 18 2019
Home / Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி

Tag Archives: ஐக்கிய தேசியக் கட்சி

பொன்சேகா உட்பட ஒருவருக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் அண்மைக்காலமாக உச்சக்கட்ட கருத்து …

Read More »

ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறும் முக்கிய கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சப் பதவி (CABINET MINISTRY) வழங்கப்படாமை உட்பட மேலும் சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே இத்தகையதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. அரசிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுவருகின்றது. விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். ” என்று மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். நாட்டில் …

Read More »

ஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்

இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மைக்கு கிடைத்த வெற்றியாக, இன்றைய பதவியேற்பு நிகழ்வை தாம் பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாறாக தனக்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கோ கிடைத்த வெற்றி இதுவல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக இன்று பதவியேற்றதன் பின்னர் அலரிமாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் …

Read More »

ஜனாதிபதி பதவி விலக போகிறாரா?

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களுக்கு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மைத்திரி சில நாட்களுக்கு முன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நான் ஒரு மணி நேரத்திலே பதவி ராஜினாமா செய்வேன் என மைத்திரி அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது ரணில் பதவி பிரமாணம் இவர் முன்னிலையிலே நிறைவேறியுள்ளது ஆனால் அவர் எந்தவித …

Read More »

ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று (12) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ்காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பளனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோரினல் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை குறித்து கட்சித் …

Read More »

சபாநாயகர் மீது கடும் ஆவேசத்தில் விமல்

ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்று சபாநாயகரை விளித்தேன். இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாக நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் அமர்வுகளைப் புறக்கணித்து மஹிந்த தரப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதையடுத்து …

Read More »

மைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்

பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் …

Read More »

மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் ​தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாகத் …

Read More »

ரணில் திடீர் பதவி விலகல் ?

நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜனாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. அம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் …

Read More »

மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு …

Read More »
error: Content is protected!