Saturday , December 15 2018
Home / Tag Archives: அறிக்கை

Tag Archives: அறிக்கை

உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்.. இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள்

காவிரி விவகாரம் தொடர்பாக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தை தொடங்கியபோது, அவருடன் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். அந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு மதிமுக தொண்டர் இன்று தீக்குளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்த …

Read More »

நீதிக்கு நீதி வேண்டும் என்று மத்திய அமைச்சரை கேட்கும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என கூறிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நீதிக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட …

Read More »

மது போதையில் மயங்கி நீரில் மூழ்கினார் ஸ்ரீதேவி?

நடிகை ஸ்ரீதேவி துபாய் ஹோட்டலில் உள்ள அறையில் மது போதையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டவுடன், அவரது …

Read More »

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை …

Read More »

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டம், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரோணித் கிருஷ்வான்; விழுப்புரம் மாவட்டம், தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் ராஜவேல்; திருவள்ளூர் மாவட்டம், பெரியகளட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் வினித் மற்றும் பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த …

Read More »

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். அவர்கள் அளித்த சிகிச்சைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை கேட்டு இருந்தது. அதை ஏற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 5 அறிக்கைகளை இன்று தாக்கல் செய்தனர். தமிழக …

Read More »

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், …

Read More »
error: Content is protected!