Thursday , April 18 2024
Home / Tag Archives: அமெரிக்கா (page 2)

Tag Archives: அமெரிக்கா

24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு

அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், …

Read More »

உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி

அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக …

Read More »

வடகொரியா மீதான அழுத்தம் தொடரும்

வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய வாரங்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு நடைபெறும் சந்திப்பில் சாத்தியப்படுமானால், ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடிய பொறுப்பு …

Read More »

சிரியா மீதான தாக்குதல் தொடரும்

டொனால்ட் ட்ரம்ப்

சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். …

Read More »

பழிவாங்கும் எண்ணத்துடன் மூண்டுள்ள பனிப்போர்

ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களின் அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்று குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலால் உருவாகியுள்ள மோசமான நிலைமையில் கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தின் தொடக்கத்தில் குட்ரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். …

Read More »

ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறிவந்த நிலையில், தற்போது தாக்குதலை துவங்கியுள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு …

Read More »

போர் பதற்றத்தில் ரஷ்யா

சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினறனர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். ஆனால், ரசாயன் தாக்குதலை …

Read More »

அமெரிக்காவில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்படும் கருப்பு இனத்தவர்கள்

அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியா மாகாணத்தில் கருப்பு இனத்தவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீசார் அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பிறகு அவர் கையில் இருந்தது துப்பாக்கி இல்லை ஐபோன் என தெரிந்தது. இதனால் போலீஸாரைக் கண்டித்து கருப்பு …

Read More »

இலங்கைக்கான வரிச்சலுகையை மீண்டும் அங்கீகரித்தது அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் திட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த வரிச்சலுகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. நடப்பு வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கடந்த 23ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும், அதில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகத்தின் …

Read More »

வடகொரிய அதிபர் சீனாவிற்கு ரகசிய பயணம்?

வடகொரிய அதிபர் கிம் சீனாவிற்கு சென்றுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் இந்த சந்திப்பின் பின்னணியில் உள்ள ரகசியங்களும் வெளியே வரும். வடகொரியாவின் அதிபர் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது குறித்து வடகொரிய தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை கிம்மின் …

Read More »