Tuesday , October 23 2018
Home / Tag Archives: அமெரிக்கா

Tag Archives: அமெரிக்கா

வர்த்தக போர்: வரியை ரத்து செய்தது சீனா!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. அமெரிக்கா சீனாவை எதிர்த்து வரும் நிலையில், சீனா அமஎரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது. எனவே, இதன் முதற்கட்ட முயற்சியாக இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி …

Read More »

வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்!

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க …

Read More »

அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா: சந்திப்பில் புதிய திருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் னைவரின் கோபத்தை சம்பாதித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்தார். இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை …

Read More »

24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு

அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், …

Read More »

உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி

அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக …

Read More »

வடகொரியா மீதான அழுத்தம் தொடரும்

வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய வாரங்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு நடைபெறும் சந்திப்பில் சாத்தியப்படுமானால், ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடிய பொறுப்பு …

Read More »

சிரியா மீதான தாக்குதல் தொடரும்

சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். …

Read More »

பழிவாங்கும் எண்ணத்துடன் மூண்டுள்ள பனிப்போர்

ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களின் அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்று குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலால் உருவாகியுள்ள மோசமான நிலைமையில் கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தின் தொடக்கத்தில் குட்ரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். …

Read More »

ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறிவந்த நிலையில், தற்போது தாக்குதலை துவங்கியுள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு …

Read More »

போர் பதற்றத்தில் ரஷ்யா

சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினறனர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். ஆனால், ரசாயன் தாக்குதலை …

Read More »
error: Content is protected!