Tuesday , October 23 2018
Home / Tag Archives: அதிமுக

Tag Archives: அதிமுக

மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி

தமிழகத்தில் காவிரி தண்ணீருக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுகவும் காவிரிக்காக உண்ணாவிரதம் உள்பட ஒருசில போராட்டங்களை நடத்தி வருகிறது இந்த நிலையில் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யுவராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘எங்களை பொருத்தவரையும் காவிரி நீரை கர்நாடகத்திற்கே கிடைக்கவே முக்கியத்துவம் கொடுப்போம். கர்நாடக மாநிலத்தின் தேவை போக மீதியிருந்தால் மட்டுமே எங்கள் சகோதரர்களாக …

Read More »

காவிரி விவகாரத்துல திமுகவும் அதிமுகவும் ஓவரா நடிக்குறாங்க

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரத்துல திமுக வும், அதிமுகவும் அப்பட்டமாக நடிக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அதிரடியாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் …

Read More »

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பு

காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் …

Read More »

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய …

Read More »

இதெல்லாம் கவனிக்க வேண்டாமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் உருவ சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, தமிழக அரசு சார்பில் மானிய ஸ்கூட்டி வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது. …

Read More »

அதிமுகவை பார்த்து பாடம் கற்றுக்கொண்டு உஷாரான கமல்!

அரசியல் கட்சிகள் பொதுவாக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என அனைத்து பதவிகளை கொண்டதாக இருக்கும். ஆனால், கமலின் கட்சியில் இவை எதுவுமே இல்லை. மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை கமல் நேற்று அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தான் தலைவன் இல்லை என்றும், மக்களின் கருவி என்றும் கூறினார். அதற்கு ஏற்றார் போல் அவரது கட்சியில் கூறும்படியான பதவிகள் ஏதும் இல்லை. உயர்மட்ட குழு மற்றும் மாநில …

Read More »

மாதவனை நான்கு நாட்களாக காணவில்லை

தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு மாதவன் வீட்டை விட்டு செல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு எழுவதாகவும், அதற்கு டிரைவர் ராஜாதான் காரணம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், மாதவனை, ராஜா ஒருமையில் திட்டும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில்தான், தீபாவின் வீட்டில் போலி வருமான வரித்துறை …

Read More »

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்

பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் …

Read More »

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து …

Read More »

பேராறிவாளன் திடீர் விடுதலை ?

அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக …

Read More »
error: Content is protected!