Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார்.

இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது.

வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற போட்டியெழுந்துள்ளது.

எனினும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், முதலமைச்சருக்கு எதிராக அண்மை காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுமந்திரன் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv