Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் படுகொலைகளுக்கு நீதி வேண்டிபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

யாழில் படுகொலைகளுக்கு நீதி வேண்டிபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் எனவும், வழக்கை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனவும் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம், கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“சேயாவுக்கு ஒரு நீதி வித்தியாவிற்கு ஒரு நீதியா?”, “காவுகொள்ளப்பட்ட எம் உறவுகளுக்கு நீதி வேண்டும்?”, “பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம்; பிணைப்பட்டு துணைப் போய் திரிய வேண்டாம்” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு அமைதியான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்தார்கள்.

போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாணவர்கள்,

“காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமனாகும். எமது நாட்டில் குற்றச் செயல்களும் வன்புணர்வுகளும் அதிகரித்துச் செல்லும் வேளையில், அதற்கான நீதிகள் காலம் தாழ்த்தப்பட்டு வழங்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் நடைபெறும் கற்பழிப்புகள் மற்றும் வன்புணர்வுச் சம்பவங்களுக்கான தீர்ப்புகள் இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் தாழ்த்தி வழங்கப்படுகின்றது. எதற்காக தண்டனைகள் வழங்கப்பட்டன என்றே தெரியாமல் இருக்கின்றது.

எமது பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வேளையில், அமைதியான முறையில் எமது போராட்டத்தை முன்னெடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்தபோது, மாணவர்கள் அஹிம்சை வழியில் போராடுகிறார்கள் என்ற பாராட்டுக் கிடைத்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீட்டாருக்கு வீடுகள் வழங்குவதாகவும், மாணவர்களின் படுகொலைக்கான குற்றப்பத்திரம்மா மூன்று மாத காலத்திற்குள் வழங்கப்பட்டு உரிய தீர்வைப் பெற்றுத் தருவோம் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். 8 மாதங்கள் கடந்த நிலையிலும் கூட குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கை கொழும்புக்கு மாற்றுவது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாவின் படுகொலைக்கான நீதி எமது சமூகத்தில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை. எமது சமூகத்தில் வைத்து நீதி வழங்கும் போது, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றங்களைச் செய்வதற்கு பயப்படலாம். இங்கு நீதியை வழங்கினால், ஏனைய குற்றங்களை தடுப்பதற்கும் வழியாக இருக்கும்” – என்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …