Monday , April 23 2018
Home / முக்கிய செய்திகள் / பஞ்சாப் அணி வெற்றி

பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிவேக அரைசதம் விளாசி அசத்தினார். கருண் நாயரும் அரைசதம் விளாசினார். 18.4 ஓவரில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 23.04.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  …

error: Content is protected!