Thursday , April 11 2024
Home / தொழில்நுட்பம் / இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 இந்தியாவில் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) மாடலின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேதான் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் அசுஸ் பிரத்தியேக விற்பனையாளர்களிடம் கிடைக்கும் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) டைட்டானியம் கிரே, கிளேசியர் சில்வர் மற்றும் சான்ட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் (ZC553KL) வெளியீட்டின் போது ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. பின் ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதால் விலை குறைந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இதன் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Technology News